பொது மைய்யவாடிக்கான கட்டிட திறப்பு விழாவும் மர நடுகையும்..!

வெள்ளிக்கிழமை இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுகீட்டின்மூலம் முள்ளிபொத்தானை 10ம் கொலனி மைய்யவாடி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திறந்து வைத்தார்.

மேலும் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் ஜெயவிஷ்ணு வழிகாட்டலுடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் முதாலாவது ஆண்டு நல்லாட்சி நிறைவினை முன்னிட்டு மாகாண சபை உறுப்பினரால் மர நடுகையும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதேச பள்ளிவாயல்களின் நிர்வாகிகள் பல்வேறு சங்கங்களை பிரதிநிதித்துவபடுத்தும் உறுப்பினர்களும் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்துகொண்டதுடன் மாகாண சபை உறுப்பினரின் தம்பலகாமம் பிரதேசத்துக்கான இணைப்பாளர் அயூப்கான் ஆசிரியரும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -