பேருவளையைச் சேர்ந்த இஷ்ரத் இக்பால் (வயது 27) நேற்று சார்ஜா விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஸ்தலத்திலேயே பலியானார்.
இவரது மரணம் தொடர்பில் Khaleej Times வெளியிட்டுள்ள செய்தியில் நேற்று நண்பகல் 12:30 மணியிளவில் சார்ஜா விமான நிலையத்தில் 15 கிலோகிராம் எடையுள்ள காட்போட் பெட்டிகளை ஒரு இராக்கையில் இஷ்ரத் அடுக்கிக் கொண்டிருந்துள்ளார். அப்பெட்டிகள் திடீரென அவர் மீது சரிந்து வீழ்ந்துள்ளன. இவ்விபத்தில் அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.
விமான நிலைய மருத்துவ குழு பலத்த முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவை பலனலிக்கவில்லை. மண்டையோட்டில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் நெஞ்சு, தலை ஆகியவற்றிற்குள் ஏற்பட்ட இரத்தக் கசிவு என்பனவே மரணத்திற்கான காரணமென அல் காஸிமீர் வைத்தியாசாலையின் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் சார்ஜா பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். இவரது குடும்ப உறுப்பினர்கள் இறுதிக்கிரியையினை மேற்கொள்வதற்கு இன்று சார்ஜா நோக்கி பயணித்துள்ளனர்.

