தாஜுதீன் கொலை தொடர்பில் விசாரிக்கப்படும் நபர் பற்றி வெளியான தகவல்கள்..!

கர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் இராணுவ உயரதிகாரியான கெப்டன் திஸ்ஸவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

புலனாய்வுப் பிரிவினர் கெப்டன் திஸ்ஸ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் படைப் பிரிவிலும், மஹிந்தவின் சாரதியாகவும் கெப்டன் திஸ்ஸ கடமையாற்றியுள்ளார்.

தாஜுதீனின் வாகனம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது கெப்டன் திஸ்ஸவிற்கு நிகரான ஒருவரை தாம் அவதானித்ததாக, சம்பவத்தின் வாக்கு மூலம் அளித்த சிலர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது தாஜுதீனின் வாகனத்திற்கு அருகாமையில் இரண்டு டிபென்டர் ரக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், பொதுமக்கள் வாகனத்திற்கு அருகாமையில் நெருங்க அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாகனம் வெடித்துச் சிதறும் என்பதனால் அருகாமையில் செல்ல வேண்டாம் என பிரதேச மக்களுக்கு, டிபென்டர் ரக வாகனங்களில் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருலப்பணை சந்தியில் கிடைக்கப்பெற்ற சீ.சீ.ரி.வி காட்சிகளில் தாஜுதீனின் வாகனத்தை சில வாகனங்கள் பின்தொடர்ந்து செல்வது பதிவாகியுள்ளது.

பின்தொடரும் வாகனங்களை விட்டு விலகிச் செல்ல தாஜுதீனின் வாகனம் முயற்சிப்பதனையும் அது தடுக்கப்படுவதும் சீ.சி.ரி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளன.

இந்தக் காட்சிகள் கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

கெப்டன் திஸ்ஸ டிபென்டர் வாகனமொன்றில் சென்றிருக்கலாம் எனவும், இரண்டு வாரங்களில் சீ.சீ.ரி.வி. கமரா காட்சிகள் பற்றிய முழு விபரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸ் தலைமையக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -