திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பொதுக்கூட்டமும்..!

அப்துல் அஸீஸ்-
ல்முனை பிரதேச திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும்,பொதுக்கூட்டமும் நேற்று(12) மாலை மருதமுனை சமூக வள நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் சென்றகால நடவடிக்கைகள், எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்தலோசிக்கப்பட்டதுடன், நடப்பு ஆண்டுக்கான நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது.

திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் தலைவர் ஏ.பி.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட திவிநெகும பணிப்பாளர் சந்துரூபன் பியதாச, அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் உதார நானயக்கார, திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் எ .ஆர்.எம். சாலிஹ், முகாமையாளர்களான எ.சி.அன்வர், எஸ்.சதீஸ் ,ஒன்றியத்தின் செயலாளர் ஐ.எல்.அருசுடீன் உட்பட கல்முனை பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -