கடந்த சனிக்கிழமை 12 -12 -2015 அன்று அல் புர்கான் நலன்புரி அமைப்பின் அனுசரணையுடன் ஹெம்மாதகமை மடுள்போவை அல் மர்கஸுல் இஸ்லாமியில் ஆண்டு 7,8,9,10ல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 5 நாள் இஸ்லாமிய வழிகாட்டல் வகுப்புகள் நடாத்தப்பட்டு, சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் அல் புர்கான் நலன்புரி அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம் நவாஸ் மதனீ அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.
நிகழ்ச்சிகள் யாவும் மெளலவி முர்சித் அப்பாஸியின் தலைமையில் நடாத்தப்பட்டது.
தகவல் : ஐ.எல்.எம் நவாஸ் மதனீ.





