ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எஸ்.அஷ்ரஃப்கான்-
அகில இலங்கை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பு எப்.சீ.அணிக்கும், இராணுவ அணிக்குமிடையில் இன்று (05) சனிக்கிழமை விளையாட்டுத்துறைஅமைச்சின் மைதானத்தில் இடம்பெற்றது.
டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியில் கொழும்புஎப்.சீ அணி வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இப்போட்டி நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், டயலொக் நிறுவனத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஹான் விஜயசூரிய ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டுபரிசில்களையும் வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கி வைத்தனர்.


