சவுதிக்கு பணிப்பெண்களை அனுப்பாதிருக்க நடவடிக்கை - அமைச்சர் அதுகோரல

னாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி பணிப்பெண்களை சவுதிக்கு அனுப்புவதா? இல்லையா? என்ற தீர்மானம் எடுக்கப் போவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

விசேடமாக பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அதற்கு உரிய தீர்வு பெற வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்நாட்டுப் பெண்களை பணிப்பெண்ணாக அனுப்புவதை விடுத்து தொழில் பயிற்சி வழங்கி உயர் தொழில்களுக்கு அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

குறைந்த வயதில் சவுதி சென்ற ரிஸானாவும், கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டும் என தண்டனை வழங்கப்பட்டுள்ள மருதானை பெண்ணும் அனுபவிக்கும் துன்பங்களைப் பார்க்கும் போது பெண்களை பணிப் பெண்ணாக சவுதி அனுப்புவதைப் பற்றி இருமுறை யோசிக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -