கொளனி அல்-மஸ்ஜிதுல் ரௌழா மையவாடி தைக்கா பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!

எம்.எம்.ஜபீர்-
6ஆம் கொளனி, சொறிக்கல்முனை சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள அல்-மஸ்ஜிதுல் ரௌழா மையவாடி தைக்கா பள்ளிவாசல் டுபாய் நாட்டின் ரகுமா அமைப்பின் 2 மில்லியன் ரூபாய் செலவில் முஸ்லிம் கலாச்சார மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பள்ளிவாசலுக்கு இன்று (13)அடிக்கல் நாட்டப்பட்டது.

6ஆம் கொளனி ஜூம்மா பள்ளிவால் தலைவர் எம்.எச்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முஸ்லிம் கலாச்சார மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர்களான எம்.அல்தாப், எஸ்.கஸ்ரீம், சவளக்கடை அர்-ரகுமான் ஜும்மா பள்ளிவால் தலைவர் ஐ.எல்.பாறூக், 6ஆம் கொளனி ஜூம்மா பள்ளிவால் செயலாளர் எஸ்.ஐ.எம்.முபீன், பொருளாளர் எம்.சீ.ஏ.ஜப்பார், சாளம்பைக்கேணி-02 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.ஜலீல், சாளம்பைக்கேணி-02 கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.எம்.அஸ்வர், றோயல் விளையாட்டுக் கழக அணித் தலைவர் வை.பாரிஸ், மிலேனியம் இளைஞர் கழகத்தின் அமைப்பாளர் ஏ.எல்.பைஸாத், பிரதேச முக்கியஸ்தர்கள், பொது மக்கள் விளையாட்டுக் கழகங்களின் பிரநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இப்பள்ளிவாசல் 1973 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் என்பது குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -