பதினைந்து வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற பாடசாலை காவலாளி..!

திருகோணமலை -திரியாய் பகுதியில் 15 வயதான சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலையின் காவலாளியை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு செவ்வாய்கிழமை (15) திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா உத்தரவிட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான புல்மோட்டை -01ம் வட்டாரத்தை சேர்ந்த முஹம்மது சாஹிபு நசுர்தீன் வயது (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திரியாய் மகா வித்தியாலயத்தில் காவலாளியாக கடமையாற்றி வந்த இவர் அதே பாடசாலையில் 09 தரத்தில் கல்வி பயின்று வரும் சிறுமியை திங்கக்கிழமை(14) கோயிலுக்கு சென்ற வேளை பலவந்தமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று காட்டுப்பகுதியில் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காவலாளியை கிராம மக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் கிராமமக்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட காவலாளியிடம் எனொக்ரா என்றழைக்கப்படும் காம உணர்வூட்டும் மாத்திரை மூன்றும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -