வறிய குடும்பங்களின் குடிநீர் மின்சார இணைப்பிற்காக 2 இலட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு - சுகாதார அமைச்சர்

அபுஅலா –
சாய்ந்தமருது பிரதேசத்தில் வசிக்கும் மிக வறிய குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்வதற்காகவேண்டி தனது பன்முகப்படுத்தப்பட்ட இவ்வாண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று (08) தெரிவித்தார்.

கல்முனை மாநகர பிரதி முதல்வர் முஸ்லிம் முழக்கம் அப்துல் மஜீதின் வேண்டுகோளுக்கமைவாகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், சாய்ந்தமருது பிரதேசத்தில் வாழும் மிக வறிய 13 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பினையும், மின்சார இணைப்பினையும் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நிதி ஒதுக்கீட்டினை மிக அவசரமாக ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச சமூக நலன்புரி, பராமரிப்பு, சமுக சேவைகள் மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -