ஏ.எல்.ஜனூவர்-
அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்ளுக்கான தொற்றா நோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கும் மருத்துவ பரிசோதனையும் 2015.12.12 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் காலை 10.15 வரை அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
இந் நிகழ்வில் ஊடகவியலாளர்ளுக்கான தொற்றா நோய் மருத்துவ பரிசோதனையும், தொற்றா நோய் சுயவிபர மருத்துவ அறிக்கை பதிதல் என்பன நடை பெறுவதோடு அதனைத் தொடர்ந்து சுகவாழ்வு விழிப்புணர்வுக் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஊடகவியளாளர்களும் கலந்து கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக் கொள்கின்றார்.

