ஏ.எல்.எம்.தாஹிர்-
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தின நிகழ்வையொட்டி இலங்கையை ஊழலற்ற நாடாக கட்டியெழுப்புவதற்கு அரசாங்க ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தும் நிகழ்வுகள் இன்று (09) அனைத்து அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானஜோதியும் கலந்து கொண்டிருப்பதைப் படத்தில் காணலாம்.
இந்நிகழ்வின் போது தேசியக் கொடியேற்றல், தேசியக் கீதம் இசைத்தல், இராணுவ வீரர் உட்பட தேசத்திற்காக உயிர்நீத்த அனைவருக்கும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தல். ஊழலற்ற நாடாக கட்டியெலுப்புவதற்கு உறுதிமொழியெடுத்தல் என்பனவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப் பிரிவு,
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு,
புனர்வாழ்வளிப்பு,
மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு.
நாவிதன்வெளி பிரதேச நிகழ்வு
எம்.ஐ.எம்.றபீத் -
சர்வதேச இலஞ்ச ஒழிப்பு தினமாகிய இன்று பொதுநிர்வாக அமைச்சின் உத்தரவுக்கமைய அரச நிறுவனங்களில் வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அந்த வகையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் பிரதேச செயலாளர் எஸ். கரன் தலைமையில் செயலக முன்றலில் நடைபெற்றது.
பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பிரதேச செயலாளரின் உரையும் இடம்பெற்றது.
இறுதியாக அனைத்து உத்தியோகத்தர்களும் இலஞ்சம் பெறாமல் இதயசுத்தியுடன் வேலை செய்வோம் என்ற பிரகடனத்தை செய்தவுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.





