அதிபர்கள் சுதந்திரமாகவும், நீதியாகவும் தங்களின் கடமைகளை செய்யவேண்டும் - அதிபர்கள் சந்திப்பில் அமைச்சர் நஸீர்

அபுஅலா –

அதிபர்கள் பாடசாலைகளில் அரசியல் செய்யக்கூடாது. பாடசாலை என்பது ஒரு பொதுவான இடமாகும். எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் பாடசாலைகளில் அரசியலை வளர்ப்பதால் எமது மாணவச் செல்வங்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை பாதிப்படையச் செய்துவிடும். இவ்வாறான விடயங்களுக்கு எந்த அதிபர்களும் இடமளிக்கக்கூடாது என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை கோட்ட பாடசாலை சங்கத் தலைவரும் அதிபருமான ஏ.எம்.அன்சார் தலைமையில் அதிபர்களுடனான சந்திப்பு இன்று (14) காலை 7.00 மணியளவில் சுகாதார அமைச்சரின் அட்டாளைச்சேனை காரியாலயத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர்கள் சுதந்திரமாகவும், நீதியாகவும் தங்களின் கடமைகளை செய்யவேண்டும். பாடசாலைகளில் அரசியல் பாகுபாடு காட்டி ஆட்சியிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றால் எமது பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்படையும். இதனால் அவர்களின் எதிர்காலம் பூச்சயமாக மாறிவிடும். இதற்கு அதிபர்கள் மட்டுமின்றி பாடசாலைகளில் அரசியல் வளர்க்கின்ற அனைவரும் பதில்கூறவேண்டியவர்களாக இருக்கும்.

பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய அரசியல் அதிகாரமுள்ள அரசியல்வாதிகளின் உதவிகள் தேவை, அவர்கள் உதவி செய்தார்கள் என்பதற்காக அவர்கள் சார்ந்த கட்சிக்கோ அல்லது குறித்த அரசியல்வாதியின் வளர்ச்சிக்காகவோ பாடசாலைகளையும், மாணவர்களையும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -