கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு..!

முஹம்மட் அஜ்வத்-
ல்முனை பிரதேசத்தில் கல்விகற்கும் வசதி குறைந்த விசேடமாக தாய் அல்லது தந்தையினை இழந்து கல்விகற்கும் பாடசாலை மாணவர்களிற்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்று கடந்த 02ஆம் மற்றும் 03 ஆம் திகதி (புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்) கல்முனை கமு/அல் மிஸ்பாஹ் வித்தியாலயம் மற்றும் கமு/அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளில் கல்லூரி அதிபர்களின் தலைமையில் நடைபெற்றது. 

கடல் கடந்து வந்து கத்தாரில் தொழில் புரியும் கல்முனை சகோதரர்களினால் நிர்வகிக்கப்படும் கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தினால் (Gulf Federation for Kalmunai) நடைமுறைப் படுத்தப்பட்ட இச்செயற்திட்டம் பாடசாலை அதிபர் ஜனாப் U. L முஹம்மது அமீன் அவர்களின் தலைமையில் கமு/அல் மிஸ்பாஹ் வித்தியாலயத்திலும், பாடசாலை அதிபர் ஜனாப். முஹம்மது ரஸாக் அவர்களின் தலைமையில் கமு/ அல் பஹ்ரியா மகா வித்தியாலத்திலும் நடைபெற்றது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக அல் மிஸ்பாஹ் மற்றும் அல்பஹ்ரியா ஆகிய இரு பாடசாலைகளில் இருந்து எதிர்வரும் கல்வியாண்டில் 10 மற்றும் 11 ஆம் தரங்களில் கல்வி கற்கவிருக்கும் சுமார் 150 க்கும் மேற்பட்ட வசதி குறைந்த மாணவர்கள் பாடசாலை அதிபர்களுடாக இனங்காணப்பட்டு அவர்களின் உள்வாரி மற்றும் வெளிவாரி கற்றல் நடவடிக்கைகளுக்கு தேவையான சகல கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தின் விஷேட பிரதிநிதியாக சகோதரர் S.L. அப்துல் ஹமீட் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தினைப் பற்றியும், நடைமுறைப்படுத்தப்படும் இச்செயத்திட்டத்தினைப் பற்றியும் விளக்கினார். 

தொடர்ந்து உரையாற்றியவர் “நீங்கள் உங்கள் வாழ்நாளில் தேடிக்கொள்ளும் மிக உன்னதமான சொத்து கல்வியாகும். காரணம் அதை யாரும், எத்தருணத்திலும் உங்களிடமிருந்து எடுத்துச் செல்ல முடியாது. அதுவே கல்விக்குண்டான தனிப்பெரும் சிறப்பாகும்” என்ற தொனியில் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும் எதிர்வரும் காலங்களில் எமதூரில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கல்வி மேம்பாட்டிற்கான பல்வேறு செயற்திட்டங்கள் எமது அமையத்தினால் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாடசாலை அதிபர்கள் ஜனாப் U. L மற்றும் முஹம்மது ரஸாக் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கத்தார் வாழ் கல்முனை சமூகத்தினரால் மேற்கொள்ளப்படும் இவ்வேலைத்திட்டத்தினை மிகவும் வரவேற்பதாகவும், எதிர்காலங்களில் இவ்வாறான பல வேலைத்திட்டங்களை இம்மாணவர்களிற்கு வழங்குவதன் மூலம் வளர்ந்து வரும் இளைய சமூகத்தினரது கல்விக்கு பெரிதும் உதவ முடியும் எனவும் குறிப்பிட்டனர். 

இதனைத்தொடர்ந்து பாடசாலை ஆசிரியர்களினால் பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தில் (Gulf Federation for Kalmunai) இணைய விரும்பும் கத்தார் வாழ் கல்முனை சகோதரர்கள் கீழுள்ள விண்ணப்ப படிவத்தினை (Online Application Form) பூர்த்தி செய்வதன் மூலம் உங்களுக்கான அங்கத்துவத்தினை உறுதி செய்து கொள்ள முடியும். (ஏற்கனவே விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தவர்கள் தவிர்ந்து கொள்ளவும்)

கீழுள்ள Link இணை அழுத்துவதன் மூலம் விண்ணப்ப படிவத்தினைபெறமுடியும்.


இவ்வாறு கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் தரவுகளை பெற்று முனையூர் மக்களின் ஒற்றுமையுடனும், கைகோர்ப்புடனும் கடல் கடந்து வாழும் சகோதரர்களினால் நிர்வகிக்கப்படும் கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தினால் (Gulf Federation for Kalmunai) எதிர்காலத்தில் சில ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ள உங்களது இந்த தரவுகள் எமக்கு பெரும் ஆதரவாக இருக்கும். 

எனவே கட்டார் வாழ் கல்முனை சகோதரர்கள் எம்முடன் இணைந்து முனையூரின் மறுமலர்ச்சியையும், கௌரவத்தையும், நிலையான மேன்மையையும் பேணும் வகையில் எம்மை புழுதி ஊட்டி வளர்த்த இம் முனையூர் மண்ணை தன்னிறைவடைய செய்ய ஒன்றிணைவோமாக.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -