ந.குகதர்சன்-
உள்ளுர் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக அக்கறைப்பற்று சொண்ட் ஸ்வோட் அமைப்பினால் டயகோனியா அமைப்பின் நிதியுதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளூர் உற்பத்திக் கண்காட்சி நிகழ்வு அக்கறைப்பற்று ஸவோட் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சொண்ட நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.செந்துராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எஸ்.தங்கவேல், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.செயோன், பேராசிரியர் குணபாலன், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், ஸ்வோட் அமைப்பின் பணியாளர்கள் மற்றும் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் ஆரம்ப நிகழ்வுகள் கேட்போர் கூடத்தில் இடம்பெற்று பின்னர் உள்ளுர் உற்பத்தியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட உற்பத்திகளின் கண்காட்சி நிகழ்வும் இடம்பெற்றது. இதனை அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் விநியோகஸ்தர்கள் எனப் பலரும் பார்வையிட்டனர்.









