எம்.எம்.ஜபீர்-
நற்பிட்டிமுனை பிரதேசத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் அயராத முயற்சியினால் அக்பர் நன்னீர் மீனவர் சங்கத்திற்கு மீன்பிடி வலைகள் மற்றும் விவசாயிகளுக்கு மண்வெட்டி உபகரணங்கள் 64 குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு அல்-அக்ஷா பாடசாலையின் மக்கள் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
அக்பர் நன்னீர் மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.ரீ.நஸீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் நற்பிட்டிமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு அமைப்பாளர் டாக்டர் ஏ.எல்.எம்.இப்றாகீம், கல்விமான் மன்சூர் ஏ. காதர், நற்பிட்டிமுனை கஸ்வா சமுக சேவை அமைப்பின் தலைவர் ஏ.கே.நூர்தீன், அக்பர் நன்னீர் மீனவர் சங்கத்தின் செயலாளர் எம்.ஐ.நிரோஸ், மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அக்பர் நன்னீர் மீனவர் சங்கத்தினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், நீர்வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







