வவுச்சர்களுக்கு வழங்கப்படும் சீருடைத் துணிகளில் மோசடி..!

எப்.முபாரக்-
கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவில் சீருடைக்கான வவுச்சர்களுக்கு, சில வியாபாரிகள் தரமற்ற சீருடைத் துணிகளை வழங்கி வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதனால் தரமான சீருடைகளை வழங்குமாறும் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசுவர்கான் பகிரங்க வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சில வியாபாரிகள் தரமற்ற சீருடைக்கான துணிகளை வழங்குவதாக பெற்றோர்கள் முறையிட்டதையடுத்து, இந்த வேண்டுகோள் நேற்று சனிக்கிழமை (12) விடுக்கப்பட்டுள்ளது.

சீருடையின் சேர்ட்டுக்கு, ஜப்பான் டீசி வெள்ளை 65 கொட்டன் 35 பொலிஸ்டர் கொண்ட துணியாகவும் சீருடை காற்சட்டைக்கு ஜப்பான் டீசி வெள்ளை 65 கொட்டன், 35 பொலிஸ்டர் துணியாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக பெற்றோர்கள் பரிசீலித்து பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -