அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு 5 கோடி நிதி ஒதுக்கீடு - சுகாதார அமைச்சர் நஸீர்

அபுஅலா –
ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக மத்திய அரசின் உதவியுடன் 5 கோடி ரூபா நிதியின் மூலம் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார். 

சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் மத்திய அரசாங்க சுகாதார அமைச்சின் பொறியிலாளர்கள் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று மதியம் (13) அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையை பார்வையிடுவதற்காக திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வைத்தியசாலையின் குறைபாடுகளை பார்வையிட்டதன் பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

வைத்தியசாலையை அபிவிருத்தி செய்து கட்டிடங்களை அமைத்து தருவது பெரியவிடயமல்ல. அந்த கட்டிடங்களை சிறந்த முறையில் சுத்தமாக பேனிப்பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு வைத்திய பொறுப்பதிகாரி உள்ளிட்ட கடமையிலிருக்கும் அனைவருக்கும் பங்குண்டு.

இந்த வைத்தியசாலையின் நிலைமையை பார்க்கும்போது மிகக் கவலையாகவும் மனவேதனையாகவும் உள்ளது என்றார்.

இந்த விஜயத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம் அமைச்சரின் விஷேட ஆலோசகர் எஸ்.எல்.முனாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -