நிஸ்மி-
அக்கரைப்பற்று காதிரியா மக்கள் சேவை மன்றத்தின் ஆங்கில முன் பள்ளி பாடசாலையின் 23வது வருட விடுகை விழா (06) ஞாயிற்றுக்கிழமை காதிரியா முன் பள்ளி பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
காதிரியா மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் யூ.எல்.அப்துல் றஹ்மான் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன் பள்ளிக் கல்விப் பணியக அம்பாரை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர், அதிதிகளாக காதிரியா வித்திலாயல அதிபர் எம்.எச்.எம்.பரீட், ஓய்வு பெற்ற அதிபர் ஏ.ஆர்.ஏ.ஜவாட், ஆசிரியைகள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முன் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை, கலாசார, நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் விடுமுறை பெறாத மாணவ, மாணவிகளுக்கு வெற்றி விருதுகள், சான்றிதழ்கள என்பன வழங்கப்பட்டன.
கடந்த 13 வருடங்களாக தொடர்ச்சியாக தலைவராக இருந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் தலைவர் யூ.எல்.அப்துல் றஹ்மான் அவர்களின் சேவையைப் பாராட்டி அவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
23 வருடமாக செயலாளராகவிருந்து செயற்படும் செயலாளர் எஸ்.எல்.சுக்கூர் மௌலவியும் பரிசு வழங்கி பாராட்டப்பட்டார்.








