பஸ் இரண்டு நேர்க்கு நேர் மோதி விபத்து - 20 பேர் வைத்தியசாலையில்

க.கிஷாந்தன்-
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 01.12.2015 அன்று பிற்பகல் 01.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருபது பேர் படுங்காயங்களுடன் கினிகத்தேனை மற்றும் வட்டவளை ஆகிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….

அட்டனிலிருந்து கண்டி பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் அட்டன் கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இரு பஸ்களிலும் பயணித்த பயணிகளில் 20 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை மற்றும் கினிகத்தேனை ஆகிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட பின்னர் இதில் மேலதிக சிகிச்சைக்காக 4 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்தோடு இவ்விபத்தில் மேலும் இருவர் படுங்காயம்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -