அண்மையில் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் குறித்த பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் சாதகமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்திற்காக மாணவர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து மாணவர்கள் சமாதானமான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில குழுக்கல் சூழ்ச்சியான முறையில் ஆத்திரமூட்டும் வகையில் தூண்டிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனை உறுதி செய்யும் வகையில் அந்த நிலைமையினை தடுப்பதற்காக பலமுறை மாணவர்கள் முயற்சிக்கு காணொளி ஒன்று அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் மாணவர்களை கடுமையாக தாக்கி ஆர்ப்பாட்டத்தை கலைக்குமாறு அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரினால் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களை குழப்பி விட்டு எதிர் தாக்குதல் மேற்கொள்ளும் செயற்பாடும் ஒரே இடத்தில் திட்டமிடப்பட்டதென தகவல் வெளியாகியுள்ளது.
இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் உள்ள அதிகாரப் போராட்டத்தின் ஒரு அறிகுறியாக இந்த சம்பவம் உள்ளதோடு, மக்கள் மத்தியில் ஐக்கிய தேசிய கட்சி மீது மதிப்பிழக்க செய்வதே இதன் நோக்கமாகும்.
எதிர்வரும் இரண்டு வருடத்தினுள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றினை நாடாளுமன்றத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை நீண்ட தூரம் கொண்டு செல்லாமல் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
