ஆறு வயதான தனது மகனை, ரயிலுக்கு தள்ளிவிட்டு அவரை கொலைச்செய்வதற்கு முயன்ற சம்பவம் தொடர்பில் அச்சிறுவனின் தாயை பொலிஸார் கைதுசெய்துள்ளர்.
கண்டியிலிருந்து மாத்தளையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ரயிலுக்கே, கண்;டி பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து அத்தாய், இந்த கொடூரமான காரியத்தை இன்று புதன்கிழமை காலை 7.15க்கு செய்வதற்கு முயன்றுள்ளார்.
தன்னுடைய மகனை அடித்து அடித்து இழுத்துவந்த அத்தாய், அந்த சிறுவனை இழுத்துபிடித்து ரயிலுக்கு தள்ளிவிடுவதற்கு முயன்றுள்ளார். இதனை, அவதானித்த கண்டி பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரி, அச்சிறுவனை காப்பாற்றியுள்ளார்.
அவ்வாறு முயற்சி செய்த அந்த தாய், அங்கிருந்து தப்பியோடிய போதிலும், அவரை பின்னர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுவனின், தாய் என்று சந்தேகிக்கப்படும் தாய்க்கு இவர், கடைசி பிள்ளை என்றும், இந்த பிள்ளை தொடர்பில் கணவன், கணக்கில் எடுக்காமையால் அந்தபிள்ளை கொலைச்செய்வதற்கு முயன்றதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரான அந்த பெண்ணும், அவரது கணவனும் கண்டியில் கூலிவேலைச்செய்வதாக அறியமுடிகின்றது.
