HNDA மாணவர்களுக்காக சம்மாந்துறையில் கவனயீர்ப்பு பேரணி - அதிகாரிகள் கவனம் எடுப்பார்களா? (படங்கள்)

யு.எல்.எம்.றியாஸ், சர்பான்-
ல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக கடந்த 29ம் திகதி இலங்கை உயர் தொழில் நுட்பக் கற்கை நிறுவகத்தின் உயர் தேசிய கணக்கீடு டிப்ளோமா (HNDA ) மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையைக் கண்டித்தும், உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா பாடநெறிக்கு வணிக இளமாணி பட்டத்திற்கு சமமான பட்டத்தை மீண்டும் வழங்கக் கோரியும் இன்று (02.11.2015) சம்மாந்துறையில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

சம்மாந்துரையில் அமைந்துள்ள இலங்கை உயர் தொழில் நுட்பக் கற்கை நிறுவகத்தின் உயர் தேசிய கணக்கீட்டு மாணவர்கள் ஒன்றியம் இவ் கவனயீர்ப்பு பேரணியை ஒழுங்கு செய்திரிந்தனர்.

சம்மாந்துறை விளினயடிச் சந்தியில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி பிரதான வீதியூடாக ஹிஜ்ரா சந்தியை வந்தடைந்தது.

இதன் போது பேரணியில் கலந்துகொண்ட மாணவ,மாணவிகள் பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -