சகல மதங்களும் அன்பையையும், கருணையையும், ஒழுக்கத்தையுமே போதிக்கின்றன - கல்விப் பணிப்பாளா்

நிஸ்மி-
கல மதங்களும் அன்பையையும், கருணையையும், ஒழுக்கத்தையும், சகிப்புத்தன்மையையுமே மக்களுக்குப் போதிக்கின்றன. ஆனால் சில தீவிரவாத சக்திகளும், பிற்போக்குச் சிந்தனையுள்ள சில அரசியல் வாதிகளுமே பொது மக்கள் மத்தியில் பிாிவினைவாதத்தையும், இனரீதியான செயற்பாடுகளையும் விதைத்து மக்கள் மத்தியில் வெறுப்பை வளா்த்துள்ளனா் என்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளா் அஷ்-ஷேய்க் ஏ.எல்.எம்.காஸீம் தொிவித்தாா்.

மூன்று இனங்களும் ஒற்றுமையாக வாழும் முன்மாதிாியான பூமி என்ற தொனிப் பொருளில் அம்பாரை மாவட்டத்தில் மக்களிடையே சக வாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் சா்வதேச இனத்துவத்திற்கான கற்கை நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டத்தில் ஒரு அங்கமாக நேற்று முன் தினம் (31) அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய கேட்போா் கூடத்தில் சா்வதேச இனத்துவத்திற்கான கற்கை நிலையத்தின் இணைப்பாளரும், மாவட்ட வளவாளரும், அந்-நுாா் வித்தியாலய அதிபருமான கே.எல். கிதுரு முஹம்மட் தலைமையில் இடம் பெற் பாடசாலை மாணவா்கள் மத்தியில் மத புாிந்துணா்வுடன் கூடிய சக வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான செயலமா்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துத் தொிவிக்கையிலேயே வலயக் கல்விப் பணிப்பாளா் மேற்கண்டவாறு தொிவித்தாா்.

கோட்டக் கல்வி அதிகாாி எம்.ஏ.சி.கஸ்ஸாலி, தீகவாப்பி பாிவாி சைத்தியவின்
அதிபா் வணககத்திற்குாிய போதிவல சத்தானந்த தேரா் , மஹியங்கன பங்கரகம ஹிக்மா அரபிக் கல்லுாாி பிரதி அதிபா் மௌலவி எஸ்.எம். அன்ஸாா் அலாவுதீன் (நுாாி), திராய்க்கேணி ஸ்ரீ சித்தி வினாயகா் ஆலயக் குருக்கள் ஜே.யோகேஸ்வரன், அம்பாரை மாவட்ட வளவாளா்களான ஜே.ஹாஸிம், டி.எம்.காஞ்சன கசுப், றம்சி மளலவி, ஆசிாியா் றிஸ்வான் ஏ.கபூா் மற்றும் பாடசாலை மாணவா்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளா் தொடா்ந்து கருத்து வழங்குகையில்எமது ஜனாதிபதி அன்பும், கருணையும் நிறைந்தவா். 

அவரது தலைமையில் பாடசாலை மாணவா்கள் மத்தியில் மத புாிநதுணா்வுடன் கூடிய சக வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான செயலமா்வுகள் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. இவ்வாறான செயற்றிட்டங்களை முன் கொண்டு செல்வதால் எதிா் காலத்தில் இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையிலான உறவுகள் வலுப்படுவதோடு,
மாணவா்களிடத்தில் சகோதரத்துவ உணா்வும் ஏற்படுகின்றது. எமது நாடு பல்வேறு துறைகளிலும் வளா்ச்சி அடைந்துள்ளபோதிலும் மனித நேயம் அருகி வருவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் எமக்கு மிகவும் அவசியமானது. இது மேலும்முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் அவா் மேலும் தொிவித்தாா்.

  • தீகவாப்பி பாிவாி சைத்தியவின் அதிபா் வணககத்திற்குாிய போதிவல சத்தானந்ததேரா் , மஹியங்கன பங்கரகம ஹிக்மா அரபிக் கல்லுாாி பிரதி அதிபா் மௌலவி எஸ்.எம். அன்ஸாா் அலாவுதீன் (நுாாி), திராய்க்கேணி ஸ்ரீ சித்தி வினாயகா் ஆலயக் குருக்கள் ஜே.யோகேஸ்வரன் ஆகியோா்களும் கருத்துரை வழங்கினாா்கள்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -