அட்டாளைச்சேனையில் சமகால அரசியலும் முன்னோக்கி நகர்தலும்” கருத்துரையும் கலந்துரையாடலும்...!

எஸ்.எம்.அறூஸ்-

முஸ்லிம் இளைஞர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள “சமகால அரசியலும் முன்னோக்கி நகர்தலும்” கருத்துரையும் கலந்துரையாடலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (2015-11-13) மாலை 6.30 மணிக்கு அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

போர் முடிவுற்று சமூக நல்லிணக்க கதவுகள் திறக்கப்பட்டிருக்கும் நம் நாட்டில், முஸ்லிம்களின் வகிபாகம் பற்றிய ஒன்றுகூடல்களையும் கலந்துரையாடல்களையும் பரவலாக மேற்கொள்ள வேண்டிய தேவை நமக்கிருக்கிறது. அந்த வகையில்;


யுத்தக் குற்ற நீதிமன்ற விசாரணைகளில் முஸ்லிம்களின் இழப்புக்களையும் உள்வாங்குதல், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இன்னுமொரு தீர்வு முயற்சியில் முஸ்லிம் விவகாரங்கள் கையாளப்பட வேண்டிய விதம், யாப்பு மாற்றமும் தொகுதி நிர்ணயமும் 


போன்ற இன்னோரன்ன விடயங்களைப் பற்றிய கருத்துரைகளும் கலந்துரையாடல்களும் முக்கிய வளவாளர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில், சமூக அக்கறையுள்ள நமது சகோதரர்களையும், இளைஞர்களையும் அவசியம் கலந்துகொள்ளுமாறும், ஆரோக்கியமான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுமாறும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -