தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டமை தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையானது தேசியப் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்படுத்தக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மஹிந்தவின் 70ம் பிறந்தநாளை முன்னிட்டு அங்குனுகொலபெலஸ்ஸ அலுத்வௌ பகுதியில் நடைபெற்ற வைத்திய சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்துள்ளர்.
புலிச் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்து சில ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
