முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு வரவு செலவுத்திட்டம் புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று வரவு செலவுத்திட்ட யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
குறித்த வரவு செலவுத் திட்டம் தனக்குப் புரியவில்லை என கூறிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்க்ஷ, வரவு செலவுத்திட்டம் வாசித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலையே அவையை விட்டு வெளியேறிச் சென்றார்.
புரியாத வரவு செலவுத் திட்டமொன்றை செவிமடுப்பதில் பயனில்லை எனவும் மஹிந்த ராஜபக்க்ஷ ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் புரியவில்லை என தெரிவித்துள்ளார்.
