கண்டி மேயராகப் பதவி வகித்த மஹேன் ரத்வத்தை இன்று தனது பதவியிலிருந்து திடீர் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள கண்டி விஷ்ணு தேவாலயத்தின் பஸ்நாயக நிலமே பதவிக்கு போட்டியிடுவதற்காகவே தனது பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த தேவாலயத்தின் பஸ்நாயக நிலமேயாக கடமையாற்றிய மொஹான் பானபொக்கே அண்மையில் காலமானதைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பரில் புதிய பஸ்நாயக நிலமே தெரிவு செய்யப்படவுள்ளார்.
இப்பதவியை அடைந்து கொள்ளும் நோக்கில் மேயர் பதவியை ராஜினாமாச் செய்துள்ள மஹேன் ரத்வத்தை, தனது ராஜினாமா குறித்து மாநகர மேயர் மற்றும் சுதந்திரக் கட்சியின் செயலாளர் ஆகியோருக்கும் அறிவித்துள்ளார்.
