வடமாகாண சபையில் குழப்பம்..!

டமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மாகாண சபை அமர்வில் எழுப்பிய கேள்வி ஒன்றினால் சபையில் குழப்ப நிலை உருவாகி பின்னர் தணிந்துள்ளது.

இன்றைய தினம் வடமாகாண சபையில் 38வது அமர்வின்போதே மேற்படி கேள்வி எழுப்பபட்டு குழப்பம் உருவானது.

இன்றைய அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மாகாண அமைச்சர்களின் செயலாளர்களுக்கான வாகன ஒதுக்கீடு என்ன? மேலதிக வாகனங்களை பயன்படுத்துகிறார்களா? அதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்?

மேலதிக வாகனம் பயன்படுத்தியமைக்காக செயலாளர்கள். யாருக்கும் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விகளை முதலமைச்சரிடம் எழுப்பினார்.

இதற்கு பதில் கொடுத்த முதலமைச்சர்,

எமது கட்சி குழு கூட்டத்தில் இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டாம் எனவும், எம்மையும் மக்களையும் கொழுவி விடும் கேள்விகள் எதிர்க்கட்சியிடமிருந்து கேட்கப்படுவதால் இந்த கேள்விக்கு பதில் கொடுக்க முடியாது என சுட்டிக்காட்டியதுடன்,

இந்த கேள்விகளுக்கான பதிலை பிரதம செயலாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள் என முதலமைச்சர் கூறினார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சர் வழங்கிய பதிலை தாம் ஒத்துக்கொள்ள மாட்டோம் எனவும் தனது சிறப்புரிமை மீறப்பட்டதாக கூறியதுடன்,

உங்கள் ஊழல்களை மறைக்கிறீர்கள் எனவும் முடிந்தால் ஊடகங்களுக்கு முன்னால் விவாதத்திற்கு வாருங்கள் என கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு முன்னால் விவாதம் நடத்தும் அவசியம் இல்லை என கூறினர்.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி போன்று நடக்கிறீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.

இதனால் இரு தரப்புக்குமிடையில் வாய்த்தர்க்கம் மூண்டது. இதன் பின்னர் ஒருவாறாக முடிந்த நிலையில் முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.

இதன்போது செயலாளர்கள் மேலதிக வாகனங்களை தேவை கருதி பிரதம செயலாளரின் அனுமதியுடன், பயன்படுத்துகிறார்கள் எனவும் செயலாளர்கள் எவருக்கும் தண்டம் விதிக்கப்படவில்லை எனவும் ஐயம் மட்டும் எழுப்பப்பட்டதாக முதலமைச்சர் பதிலளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -