இனம் அல்லது மதம் என்பவற்றின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காணப்படும் அரசியல் கட்சிகள், தமது பெயர்களை மாற்றாவிடின், அவற்றின் பதிவுகளை ரத்து செய்ய தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறு கேரி முன்வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.
இனம், மதம் என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெயரிடப்பட்டுள்ள 20 கட்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்விஸ் முன்வைத்துள்ள மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இது தொடர்பான விசாரணையை தள்ளிப் போட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
