ஜனாதிபதியின் செயட்பாடு சிறுபான்மை மக்களை உதாசீனம் செய்யும் பேரினவாத சிந்தனையாகும் - உலமா கட்சி

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதும், தேர்தல் முறையை மாற்றுவதும் சிறுபான்மை மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்யும் பேரினவாத சிந்தனையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. 

இது பற்றி அக்கட்சி தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை என்பது சிறு பான்மை மக்களுக்கு அதிகம் நன்மையளிப்பதாகும். இதில் சில குறைபாடுகள் இருந்தாலும், நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்காது ஒரு சில மாற்றங்களை மட்டும் கொண்டு வரவேண்டும் என்பதே உலமா கட்சியின் தொடர்ச்சியான கோரிக்கையாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறை மூலமே முஸலிம் காங்கிரசின் மறைந்த தலைவர் அஷ்ரப் ஐந்து வீத வெட்டுப்புள்ளியை பெற்றுத்தந்தார். அதே போல் நிறைவேற்று ஜனாதிபதி முறை மூலமே 2010 ம் ஆண்டு உலமா கட்சியினால் மௌலவி ஆசிரியர் நியமனத்தை பெற்றுத்தர முடிந்தது,

நிறைவேற்று அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படுமானால் அவரால் தற்றுணிவுடன் எந்த முடிவையும் எடுக்க முடியாது. மாறாக பாராளுமன்றத்தில் விவாதித்தே முடிவுகளை எடுக்க வேண்டி வரும். இது சிறுபான்மை மக்கள் உரிமைகள் விடயத்தில் பாரிய இழுபறியை தோற்றுவிக்கும் என்பது கடந்த கால அனுபவங்களின் வெளிப்பாடாகும்.

அதே போல் தேர்தல் முறையை மாற்ற இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், அமைச்சர் ரிசாதின் கட்சியும் வீரத்துடன் பேசின. ஆனால் இதுவும் மாற்றப்படுவதற்கான அறிகுறி உறுதியாகியுள்ளதால் ஆட்சியை மாற்றுவதில் பங்காளியான சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளை அரசு உதாசீனப்படுத்தியிருப்பதன் மூலம் பேரினத்தை திருப்திப்படுத்தும் வகையிலேயே இந்த அரசு செயற்படுவது கவலை தருகிறது.

தேர்தல் தொகுதி முறை என்பது மஹிந்த அரசில் மஹிந்த சிந்தனையின் படி கொண்டு வரப்பட்டதாகும். இதனை இந்த அரசு நடைமுறைப்படுத்துவதன் மூலம் மஹிந்த சிந்தனையை மைத்திரி ரணில் அரசு தலையில் தூக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாகவே தெரிகிறது. இது மஹிந்தவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் பாரிய ஆதரவு தளத்தை உருவாக்கும் முயற்சியாகும். 

உலமா கட்சியை பொhறுத்த வரை தேர்தல் சீர் திருத்தம் என்பது ஐம்பதுக்கு ஐம்பது என இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதே போல் முன்னாள் மாகாண சபை அமைச்சர் அதாவுள்ளாவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இந்த தேர்தல் முறையை இந்த அரசு கொண்டு வருவது அதாவுள்ளாவையும் அரசியல் ரீதியில் உயர்த்த எடுக்கும் நடவடிக்கையாகும்.

ஆகவே இது விடயத்தில் அரசு அவசரப்படாமல் மீண்டும் இது பற்றி விவாதங்கள், கலந்துரையாடல்களை செய்து புதியதோர் முறை பற்றி ஆராய வேண்டும் என அரசை உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -