நுகர்வுப் பொருட்கள் பலவற்றுக்கு அதிகபட்ச விற்பனை விலையை தீர்மானிக்க கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வகையில், மைசூர் பருப்பு ஒரு கிலோவின் அதிகபட்ச விற்பனை விலை 190.00 ரூபாவாகவும், உருளைக் கிழங்கு 1 கிலோ 145.00 ரூபாவாகவும், பீ. வெங்காயம் 1 கிலோ 155.00 ரூபாவாகவும், தோல் நீக்கிய கோழி இறைச்சி 1 கிலோ 480.00 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட கோதுமை மாவு 1 கிலோ 95.00 ரூபாவாகவும், காய்ந்த கொச்சிக்காய் 1 கிலோ 355.00 ரூபாவாகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய சில்லறை விற்பனை விலை நேற்று (18) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கட்டுப்பாடு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
