ஏ.எம்.றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் - தொப்பிகல பிரதான வீதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து பொதுமக்களின் போக்குவரத்திற்காக இயந்திரப்படகுச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிரான் தொடக்கம் புலிபாய்ந்தகல் பிரதேசம் வரைக்குமான சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் இப்படகுச்சேவை நடைபெறுகிறது.
மூன்றுபடகுகள் இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இப்படகுகளிலேயே பயணம் செய்கின்றனர்.
கிரான் பிரதேச செயலகம் மற்றும் தொப்பிகல இராணுவம் இணைந்து இப்படகுச் சேவையை நடாத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக இவ்வீதி வெள்ளத்தில் மூழ்கியள்ளமை குறிப்பிடத்தக்கது.




