காத்தான்குடி கல்விக் கோட்டத்தினைச் சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு விருது..!

ஏ.எல்.டீன்பைரூஸ்-
லங்கைத் திருநாட்டின் மாணவச் செல்வங்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க இதய பூர்வமாகப் பங்களிப்புச் செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்து கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு அன்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன கலந்து கொண்டார்.

நிகழ்வில் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் உட்பட அமைச்சின் செயலாளர், கல்வி அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தங்களது கடமை காலங்களின் போது அதிக விடுமுறைகள் இன்றி பாடசாலைகளில் கடமையாற்றிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி,கௌரவித்து கல்வி அமைச்சினால்மேற்படி விருது வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தினைச் சேர்ந்த அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஐவர் மேற்படி குரு பிரதிபா பிரபா 2015 ஆண்டுக்கான விருதினை பெற்றுக் கொண்டனர்.

01. ஜனாப். ஏ.பீ.ஏ றஸூல் (அதிபர்/மட்/மம/பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயம்) 
02. ஜனாப். எம்.ஏ.எம். இஸ்ஹாக் (ஆசிரியர்/ மட்/ மம/ பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயம்)
03. திருமதி. சபீனா ஆயிஷா) (ஆசிரியை/ மட்/ மம/ ஹிழுரியா வித்தியாலயம்)
04. திரு. தருமரெத்தினம் ஜெய்தனன் (ஆசிரியர்/ மட்/மம/ பாலமுனை அஷ்ரப் வித்தியாலயம்)
05. ஜனாப். எம். எம். யஹ்யா நஜிமுதீன் (ஆசிரியர்/மட்/ மம/ காத்தான்குடி மத்திய கல்லூரி வித்தியாலயம்)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -