உலகிலேயே விமானம் இறங்காத விமானநிலையம் உள்ள ஒரே நாடு இலங்கையாகும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தற்பொழுது அவர் நிகழ்த்தும் உரையிலேயே இதனைச் சுட்டிக்காட்டினார்.
துறைமுகத்தை கட்டி வைத்து பாரிய நிதியை செலவு செய்துள்ளது. இருப்பினும், அந்த துறைமுகத்திலிருந்து எந்தவித வருமானத்தையும் அரசாங்கம் இதுவரை பெற்றதில்லை.
கடந்த அரசாங்கம் பாரிய நிதியை செலவு செய்து அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்தது. இதற்காக வெளிநாட்டிலிருந்து கூடிய வட்டிக்கு கடனையும் பெற்றுக் கொண்டது. இப்படி கூடிய வட்டிக்குப் பெற்ற வட்டியினால் பயன் கிடைக்கிறதா? என்று நோக்கினால் அதுவும் கேள்விக் குறியாகவே இருப்பதாகவும் நிதி அமைச்சர் வரவு செலவுத் திட்ட உரையில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு வருமானம் பெறப்படாத பாரிய அபிவிருத்தித் திட்டத்துக்கு கடந்த அரசாங்கத்தின் தலைவரின் பெயர் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
