அலீஹா தாஸிம் எழுதிய சிறுகதை நூல் வெளியீட்டு விழா - எழுத்துறை பற்றி முக்கிய உரை

இக்பால் அலி-

புத்தக வெளியீட்டு விழாவிலே மக்கள் பங்கு பற்றுவது மிகவும் அரிது. குருநாகல் மாவட்டத்தில் புத்தக நூல் வெளியீட்டு விழாவில் மக்கள் பங்கு கொள்வது என்பது அரிதிலும் அரிதாகவே உள்ளன. 

இது வேறு வகையான நிகழ்ச்சியாக இருந்தால் உதாரணமாக சினிமாவாக இருந்தால் அல்லது நாடகம் நாட்டியம் சம்மந்தமான நிகழ்வுகாளக இருந்தால் சனங்கள் மண்டபம் நிறைந்து வழிந்து விடும். இது எதை காட்டுகின்றது என்று சொன்னால் கல்வியில் நாட்டம் குன்றி இருக்கின்ற நிலைமையை வெளிப்படுத்துகின்றது என்று தினகரன் ஆசிரியர் பீடத்தின் உதவி ஆசிரியர் ஏ, ஜீ. .எம். தௌபீக் தெரிவித்தார்.

குருநாகல் நகர் வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் அலீஹா தாஸிம் எழுதிய சிறுகதை நூல் வெளியீட்டு விழா குருநாகல் செர் ஜோன் கொத்தலாவெல கல்லூரியின் கேட்போர் கூடத்தில் 07-11-2015 நடைபெற்றது

ஆசிரியை பரீனா நஷீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொண்டார்.

தினகரன் ஆசிரியர் பீடத்தின் உதவி ஆசிரியர் ஏ, ஜீ. .எம். தௌபீக் நூலாய்வுரையையும், கலைஞர் கலைச்செல்வன் எம். எம்.எம். ரவூப் சிறப்ரையும் நிகழ்த்தினர்.

இதில் குருநாகல் நகர் சங்கத்தின் முஸ்லிம் வாலிபர் சங்கத்தன் தலைவர் எம். எச். முஹமட் கிஹான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர் தொடர்ந்து பேசுகையில்;

கொழும்பிலே நடைபெறுகின்ற நிகழ்சிகளாக இருந்தாலும் குறைவாகக் காணப்பட்டாலும் இதை விட அதிகளவு கூடுவார்கள். ஆனால் குருநாகல் மாவட்டத்திலே கல்வியின் தேடல் இவ்வளவுதானா என எண்ணி வியக்குமளவு சனங்கள் குறைவாக இருப்பது உண்மையிலே ஒரு வேதனை தருகின்ற விடயம்.

ஏனென்னாறால் புத்தகத்திலே சொல்லப்பட்டு இருக்கின்ற கருத்துக்கள் விலைமதிக்க முடியாதவை. ஒரு சமூகத்தினுடைய பாரிய பிரச்சினைகளையும் சவால்களையும் எழுத்துருவிலே கொண்டு வந்த இந்த ஆசிரியரின் முயற்சிக்கு குருநாகல் மாவட்டத்திலே வாழும் தமிழ் மொழிபேசுகின்ற சமூகம் வழங்கி இருக்கின்ற கௌரவத்தை நினைக்கின்ற பொழுது உண்மையிலே ஒரு வேதனை தரும் விடயம் தான்.

ஏனென்றால் கல்வியைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களை மாற்றுச் சமூகங்கள் மிகவும் மட்டகரமாக நினைக்கின்றன. முஸ்லிம்களுக்கு கல்வியிலே நாட்டம் இல்லை. முஸ்லிம்களுக்கு அறிவிலே நாட்டம் இல்லை. முஸ்லிம்கள் சாப்பிடுவதற்கும் திருமண வீடுகளிலே ஆடைகள் அணிந்து அலங்காரம் செய்வதற்கும், முஸ்லிம்கள் வீண் களியாட்ட வேலைகளிலே ஈடுபடுவதற்குமாக ஆர்வத்திலே உள்ளார்களே தவிர கனணியைப் படிப்பதற்கு தழிழைப் படிப்பதற்கு ஆங்கிலத்தை படிப்பதற்கு சர்வதேசத்திலே என்ன நடைபெறுகின்றது எனத் தேடிப்படிப்பதற்கு ஆர்வம் இல்லாhதவர்கள் என்ற கணிப்பீடு பிற சமூகத்வர்களிடையே இருக்கின்றது.

முப்பது வருடங்களாக யாழ்ப்பாணத்திலே கொடூர யுத்தம் நடைபெற்ற பொழுது பங்கருக்குள்ளே இருந்து படித்துக் கொண்டு மின்சாரம் இல்லாமல் வசதி வாய்ப்பு இல்லாமல் பேனா இல்லாமல் வெளியே இறங்கினால் இராணுவம் பிடித்து விடும் என்ற பயத்தோடு பங்கருக்குள்ளே இருந்து படித்து நான்கு ஏ எடுத்துள்ள இந்த தமிழ் சமூகத்தை வைத்துப் பார்த்து நீங்கள் வெட்கப்பட வேண்டும். இவ்வளவு வசதியான போக்குவரத்து வசதியுள்ள இந்த நகரிலே இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்கு இவ்வளவு பேர் வந்து இருக்கிறார்கள் என்றால் இந்தச் செய்தியை ஊடகங்களில் வெளியிடுவதற்கு வெட்கமாக இருக்கிறது. 

வறுமைக்காக கல்விக்கு ஆணி அடிக்கின்ற ஒரு சமூகம் ஒரு குழந்தையைப் பாடசாலைக்கு அனுப்பி க. பொ. த. சாதாரண பரீட்சை மற்றும் க. பொ. த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவிக்கச் செய்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பட்டம் பெற்று இந்த சமூகத்திற்கு பெயர் வாங்கி கொடுப்பதற்கு வக்கில்லாத சமூகமாகத் தான் எமது முஸ்லிம் சமூகம் இருக்கின்றது என்பதை இந்த ஆசிரியர் தன்னுடைய நூலிலே தம் கதைகளின் ஊடாக சுட்டிக் காட்டுகின்றார். ஒரு சகோதரரி பருவ அடையும் முன்னரே திருமணம் முடித்துக் கொடுக்கப்படுகிறாள். கல்வியிலே பெற்றோர்களுக்கு ஆர்வம் இல்லை. 

அதனால் எவனுகாவது முடித்துக் கொடுத்து விட்டு தம் சுமையை கலட்டி விடப்பார்க்கின்றார்கள். எமது சமூகத்திலே காணப்படும் பிரச்சினை தம் நூலில் தொட்டுக் காட்டுகின்றார். 

ஆனால் கல்வியினுடைய மகத்துவம் அதன் சிறப்பை விசேடமாக உலகக் கல்வியினுடைய மகத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் பத்ர் யுத்தத்திலே அவர்கள் நிறுவித்துள்ளார்கள். இதனை விளங்காத சில உலமாக்கள் கூட உலக கல்வி ஆகாது என்கின்ற ஒரு பத்வைகளைக் கொடுக்கமளவுக்கு எமது நாட்டில் அல்ல அபூரிக்கா நாட்டிலுள்ள சிலர் முன்வந்திருக்கின்றார்கள்.

 நபி (ஸல் ) அவர்கள் பத்ர் யுத்தத்தில் பிடித்த கைதிகளை விடுவிப்பதற்கு ஒரு நிபந்தனையாக எழுதக் கற்ற காபிர்கள் மதினாச் சிறார்களுக்கு படித்துக் கொடுத்து விட்டு விடுதலையாகலாம் என்று நிபந்தனை விதிக்கு அளவுக்கு அல்லாஹ் தூதுர் அந்தக் கல்வியை மதித்திருந்தார். ஆனால் எமது சமூகம் அதை மதிப்பதாக இல்லை.

அன்றைய நிலையை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மிகவுப் பெரிய கொடிய எதிரிகளையும் கல்விக்காக விடுதலை செய்யத் தயாராக இருந்தார்கள். எவ்வளவு பெறுமதியாக இந்தக் கல்வியை மதித்துள்ளார்கள். காபிர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் மார்கக் கல்வியை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். உலகக் கல்வியைத் தான் எதர்பார்த்து இருக்கின்றார்கள். இந்த உலகக் கல்வி தெரியாமையினால் தான் இன்று அரபு நாடுகள்; சர்வதேசத்தின் கையிலே விலங்குப் பிடியாக மாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். 

அவர்களிடத்திலே இருக்கின்ற அத்தனை வளங்களையும் ஐரோப்பிய யகூதி நஸாராக்களுக்கு தரை வார்த்துவிட்டு உணவுக்காகவும் வசதிக்காகவும் ஆடரம்பர வாழ்க்கைக்காகவும் அறிவையே விற்று விடுகின்றார்கள். இதைத்தான் எமது சமூகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அபுல் காலம் அவர்கள் சவுதி ஆரேபியாவிலுள்ள பலக்லைக்கழகம் ஒன்றிலே உரையாற்றினார். சவூதி அரேபியா அரசாங்கம் இந்தியா அரசாங்கத்துடன் ஒர் ஒப்பந்தம் செய்தது. நோன்பு காலத்திலே ஒப்பந்தம் செய்கின்றார்கள். 

நோன்பு காலத் தேவைக்காக 1000 டொன் மாஸ்மதி அரிசியை எங்களுக்குக்குத் தாருங்கள் 1000 கிவ்பிக் சுப்பர் பெற்றோல் தருகிறோம் எனப் பண்டாற்றச் செய்கின்றார்கள். 

கேவலம் அரசிக்காக சுப்பர் பெற்றோல் வழங்குகின்றார்கள். அபுல் காலம் கூறினார் இது மிகவும் தவாறன விடயம். அரசிக்காக அல்லாஹ் தந்த நிஹ்மத் சுப்பர் பெற்றோல் என்றால் அனுகுண்டு தயாரிக்கக் கூடிய பெற்றோல் விமானங்கள் பயன்படுத்துகின்ற பெற்றோல் இதை நீங்கள் இந்தியாவுக்கு கொடுத்தால் அந்த இந்திய அரசாங்கம் அதை தயாரித்து சுத்திகரித்து நவீன அனுகுண்டுகள் செய்து நமது முஸ்லிம் நாடான பாக்கிஸ்தானைத் தாக்குவார்கள். 

எனவே இந்த உடன்படிக்கை உடனடியாக இரத்துச் செய்யுங்கள் என்று எமது சமூகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி அபுல் காலம் சவூதி அரசாங்கத்தை அறிவூட்டு அளவுக்குத் தான் அவர்களுடைய கல்வியினுடைய தாகம் இருக்கின்றது. இதுதான முஸ்லிம்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் சம்மந்தமாக அவர்களுக்கு இருக்கின்ற ஆர்வம் என்று அவர் மேலும் விரிவாள ஆய்வுரை யொன்றை நிகழ்த்தினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -