பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக சென்ற வாகனத் தொடரணியின் ஜீப் வண்டியொன்று மோட்டார் சைக்கிளில் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அல்பிட்டி கெல்பாத பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றிருந்து.
தமது பாதுகாப்பு உத்தியோகத்தரின் சமயோசித புத்தி மற்றும் திறமை காரணமாக பாரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது. இதனால் விபத்தில் ஏற்பட்ட சேதம் வரையறுக்கப்பட்டது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மரண வீடு ஒன்றுக்காக செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



