மருதமுனை அல்மதீனா வித்தியாலயம் மாணவர்களின் ஒரு கனவுப் பாடசாலையாக உயர்ந்து நிற்கிறது- பிர்தௌஸ்

 பி.எம்.எம்.ஏ.காதர்-

ல்முனைப் பிரதேசத்து மாணவர்களினதும் பெற்றோர்களினதும் ஒரு கனவுப் பாடசாலையாக மருதமுனை அல்மதீனா வித்தியாலயம் உயர்ந்து நிற்கிறது.என கல்முனை கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் தெரிவித்தார்.

மருதமுனை அல்மதீனா வித்தியாலய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று(02-11-2015)காலை பாடசாலை வளாகத்தில் அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:- இந்தப் பாடசாலை மாணவர்களினதும் பெற்றோர்களினதும் கனவுப் பாடசாலையாக உயர்வதற்கு மிகவும் அர்ப்பணிப்போடு இங்கு கடமை புரிகின்ற அதிபரும்,ஆசிரியப் பெருந்தகைகளுமே காரணமாகும்.

எந்த விடயமாக இருந்தாலும் அதை நேர்த்தியாகவும்,சிறப்பாகவும் தனித்துவமாகவும் செய்து காட்டுவதில் மருதமுனை அல்மதினா வித்தியாலயம் இப்பிரதேசத்தில் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது என்பது உண்மையாகும்.பிள்ளைகளை கற்றோர் சபையிலே முன்னால் இருக்கச் செய்வதுதான் பேற்றோர்களுடைய கடமையாக இருக்க வேண்டும் அந்தக் கடமையைப் போன்று பெற்றோருக்கு பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கிறது.இந்தப் பிள்ளையைப் பெற்றோர் என்ன தவம் செய்தார்களே என்று ஊராரும் உலகமும் வியந்து பேச வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -