நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வூட்டும் வீதி ஊர்வலம்..!

செய்தியாளர்- பி.எம்.எம்.எ.காதர்
நீரிழிவு  நோயைக் கட்டுப்படுத்தி  ஓர் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்துவோம் என்ற தொனிப் பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய்ப் பிரிவு  ஏற்பாடு செய்த  உலக நீரிழிவு  தின விழிப்புணர்வு  ஊர்வலம் சனிக்கிழமை (14-11-2015)கல்முனையில் இடம் பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த விழிப்புணர்வு  ஊர்வலத்தில் சுகாதார பிரதி அமைச்சர் எம்.சீ.பைஸல் காஸிம் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு  ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தொற்றா நோய்ப் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸ் உட்பட வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பொது மக்களை விழிப்பூட்டும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. 




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -