வவுனியா நிருபர்-
வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் மாகாண சபையின் பிரமாண அடிப்படையிலான 2016 ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், முன்னாள் போராளிகளின் குடும்பங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக வவுனியாவைச் சேர்ந்த மக்களுடனான கலந்துரையாடல் அண்மையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாவட்ட இணைப்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் வாசஸ்த்தளத்தில் நடைபெற்றது.
பயனாளிகளின் தேவைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன் அவர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் கிராம மட்டத்திலான தேவைகளும் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலில் கோயில்குளம், கோவில் புதுக்குளம், தெற்கிளுப்பைக்குளம், இறம்பைக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
இவ் கலந்துரையாடலில் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாவட்ட இணைப்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் கழகத்தின் தோழர்களான நிஷாந்தன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


