எப்.முபாரக்-
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள சில்லறைக் கடையொன்றில் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் குறித்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளம் இளைஞர்களால் தங்கச் சங்கிளி கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், குறித்த கடையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்திருந்த பெண்னொருவரின் கழுத்திலிருந்த தாலி மற்றும் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
