அரச அதிகாரிகள் அலரிமாளிகைக்கு வரும் போது இதன் பின்னர் தனியான அரச வாகனங்களில் வர வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கேற்ப, அரச அதிகாரிகள் நான்கு பேர் ஒரு வாகனத்தில் வருகை தருமாறும் பிரதமர் கேட்டுள்ளார். அரச சொத்துக்களின் துஷ்பிரயோகம், வாகன நெரிசல் என்பவற்றைக் குறைப்பது இதன்நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகையில் கூட்டமொன்றுக்கு 15 பேர் வருகைதர 16 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமையை அவதானித்த பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
