சை.மு.ஸப்ரி-
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் இன்று காலை மாவட்ட கல்வி நடவடிக்கைகளில் காணப்படும் குறைப்பாடுகள் சம்மந்தமாக கலந்துரையாடுவதற்கு கல்வி அமைச்சுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்.
திருகோணமலை மாவட்டமானது கல்வியில் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்கள் கிராமப்புறத்திலுள்ள சிங்கள தமிழ் பிரதேச ங்களின் கல்வி நடவடிக்கைகள் மந்த நிலையிலேயே காணப்படுகின்றன
எனவே அப்பகுதிகளில் நிலவும் குறைபாடுகள் சம்மந்தமாக ஆராய்வதற்கு கடந்த சில தினங்களாக பல பாடசாலைகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள அதிபர் ஆசிரியர்களிடம் அவர்களின் தேவைகள் தொடர்பாக கேட்டறியப்பட்டன.
அத்துடன் மாவட்ட வலயக்கல்வி அதிகாரிகள் தொண்டர் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் அடிப்படையாக கொண்டு மாவட்ட கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உள்ள பிரதான பிரட்சனைகள் சில அடையாளம் காணப்பட்டன
முக்கியமாக பல பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்கள் இன்னும் நிரப்ப படாமலே உள்ளன இவ்வாறான நிலையில் இம்மாவட்ட ஆசிரியர்கள் பலருக்கு வெளி மாவட்டத்திலும் வெளிமாகாணங்களிலுமே தொடர்ந்தும் நியமனம் வழங்கப்பட்டு வருகின்றது
எனவே வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களை கொண்டு இங்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் படியும் எதிர்கால நியமனங்களை சொந்த இடங்களிலே வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டேன்
அத்தோடு தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பாகவும் பாடசாலைகளில் நிலவும் பௌதீக குறைபாடுகளை நிவர்த்தி செய்ய தேவையான நிதி ஒதுக்கீடு சம்மந்தமாகவும் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது
இன்ஷா அல்லாஹ் விரைவில் இதற்கான தீர்வுகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்கிறேன்.
இப்போது issues.imranmp@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் உங்கள் பிரட்சனைகளை கௌரவ பா.உ இம்ரான் மஹரூப் இடம் தெரிவிக்கலாம்.



