அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தொடர்பில் விசாரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு..!

மைச்சர் ஒருவரின் மகன் ஒருவர், தமது அமைச்சில் பலவந்தமாக நுழைந்து குழப்பமான முறையில் செயல்பட்டதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட தகவல் குறித்து நேற்று அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

தவறு இழைக்கப்பட்டிருக்குமேயானால் குறித்த நபருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக எந்த விடயமும் அமைச்சரவையில் பேசப்படவில்லை என நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக சந்திப்பில் அமைச்சர் மஹிந்த அமரவிர தெரிவித்திருந்தார்.

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் மகன், பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன, திருடனைப் பிடிப்பதாகக் கூறி தனது அலுவலகத்திற்குள் நுழைந்து குழப்பம் விளைவித்திருந்தார் என அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -