அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் நீரிழிவு தின அனுஸ்டிப்பு...!






சியாத் எம் இஸ்மாயில்-
டந்த உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையில் தொற்றாநோய் பிரிவு ஏற்பாடு செய்த உலக நீரிழிவு தினமானது மக்களுக்கு நீரிழிவு தொடர்பான விழிப்புணவு ஏற்படுத்தல் என்ற தொனிப் பொருளில் இன்று (17) அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் . நக்பர் தலமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஜவுபர் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சுமார் 100 மேற்பட்ட நோயாளர்களுக்கு நீரிழிவு சம்மந்தமான இரத்தபரிசோதனை நடை பெற்றதுடன் உயர் குருதி அமுக்கம் மற்றும் கொழுப்பு சம்மந்தமான நோய்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது இந்திகழ்வில் பிரதம அதிதியான டாக்டர். 

ஜவுபர் அவர்களுக்கு உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் . நக்பர் அவர்களால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது .

இயற்கை உணவு மூலம் வாழ்க்கையை அனுபவிக்கலாம் மற்றும் நீரிழிவு நோயில் இருந்து விடுபடல் போன்ற ( Healthy Life with A yurveda) என்ற செயற் திட்டமும் அமுல் படுத்தப்பட்டது .

மேலும் தொற்றா நோய் பிரிவு பொறுப்பாளர் (Dr.Nafeda) மற்றும் வெளி நோயாளர் பிரிவு பொறுப்பாளர் (Dr.Rajess) மற்றும் விடுதி பிரிவு பொறுப்பாளர் (Dr.farwin) மற்றும் வைத்திய சாலை உத்தியோகஸ்தர்களும் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் M.C kalel) மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் (R.vadivel) அவர்களும் கலந்து கொண்டனர் 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -