அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிஷங்க சேனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ன ஆகியோர், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் ஒழிப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ரக்னாலங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ரவைகளை அவன்கார்ட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19ம் 20 ஆம் திகதிகளில் அவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.