ஹாசிப் யாஸீன்-
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலர்ஸ் இரவு விருது வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (16)கொழும்பு கிங்ஸ்பெரி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்காவின்தலைமையில் இடமபெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழக பழையமாணவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.டி.எம்.திசாநாயக்கா, இலங்கைகிரிக்கெட் வீரர் ஜஹான் முபாறக் உள்ளிட்ட பல்கலைக்கழக பேராசியர்கள்.விரிவுரையாளர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பல்கலைக்கழகத்தில் பல்துறை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மற்றும் திறமைகளை வெளிக்காட்டிய மாணவ, மாணவிகளை பிரதி அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸ் பாராட்டி வெற்றிக் கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.
பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கண்களுக்கு விருந்தாக கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.



