குருநாகல் மல்லவபிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு..!

க.கிஷாந்தன்-
குருநாகல் மல்லவபிட்டியில் 18.11.2015 அன்று நண்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த முச்சக்கரவண்டி குருநாகல் மல்லவபிட்டி பள்ளிக்கு அருகில் வைத்து பஸ் வண்டி ஒன்றுடன் மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவணடியில் இருந்த மேலும் இருவர் படுங்காயமடைந்து குருநாகல் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் பரீனா உம்மா (38 வயது) என்பவரும் சபீனா (45வயது) என தெரியவந்துள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி, சாரதியின் தாயார் மற்றும் அவரின் தங்கை ஆகியோரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் குருநாகல் மகவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -