தழிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பதுடன் வடக்கில் முஸ்லிம்களையும் குடியேற்ற வேண்டும்.!

டுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தழிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக இதுவரை எவ்வித சாட்சியங்களும் இல்லாமல் குற்ற சாட்டு பத்திரங்களும் தாக்கம் செய்யப்படாமலுமுள்ள சகல சந்தேக நபர்களையும் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். 

அத்துடன் வடக்கிலிருந்த வெளியேற்றப்பட்ட எல்லா முஸ்லிம் அகதிகளையும் மீண்டும் அம்மண்ணில் குடியேற்ற அரசாங்கம் ஆதரவு அளித்து ஆவண செய்ய வேண்டும். என்ற பிரேரனைகளை முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் அரசியல் விவகாரப் பணிப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ கபூர் அவர்கள் முன் மொழிந்தார். 

அண்மையில் கண்டியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கையில் சட்டத்தரணி கபூர் மேலும் கூறியதாவது எமது கட்சியின் 26வது பேராளர் மகா நாட்டில் இதனையும் ஒரு முக்கியமான தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார். 

அதன் பிரகாரம் மேற்படி தீர்மானங்களும் ஏகமானதாக ஏற்று கொள்ளப்பட்டு முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடந்த கட்சியின் 26வது பேராளர் மகா நாட்டில் பிரேகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -