எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் நிதி ஒதுக்கீட்டின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏழு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், இரண்டு மாதர் சங்கங்களுக்கு தையல் இயந்திரங்களும் திங்கட்கிழமை (16) மாலையில் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏழு விளையாட்டுக் கழகங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாவும்,மாதர் சங்கங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


